கேள்வி :
ஒவ்வொரு இரவும், இரவின் மூன்றாவது பகுதியில், அல்லாஹ் கடைசி வானத்திற்க்கு இறங்குவதை கூறும் ஹதிஸைப் பற்றி : இரவின் மூன்றாவது பகுதி, ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்ததிற்கும் வேறுபடும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கும் மாறும். அதனால் அல்லாஹ் எப்போதும் கடைசி வானத்தில்தான் இருக்கிறானா ?
பதில் :
என் சகோதரனே ! எங்கள் நிலை இதை போன்ற விஷயங்களை பற்றி பேச தடைசெய்கிறது, இந்த நிலையை விட்டு நாம் நகர மாட்டோம். நீங்கள் இரவின் மூன்றாவது பகுதியில் ஒரு நாட்டில் இருந்தால், உறுதியாக நம்புஞ்கல், அல்லாஹ் கடைசி வானத்திற்க்கு இறங்குகிறான் என்று. அதைப்போல் நீங்கள் வேறொரு நாட்டில், மற்றொரு நெரத்தில் (இரவின் மூன்றாவது பகுதியை தவிர) இருந்தால், அங்கு அல்லாஹ் இறங்கவ்வீல்லை என்று அர்த்தம்.
உதாரணமாக, இங்கு நாம், தொஹர் நேரத்தை விரைவில் சென்றடைவொம், அதனால் அல்லாஹ் இறங்குவதில்லை. அதேசமயம், புமியியல் இரவின் மூன்றாவது பகுதியில் இருக்கிர ஒரு இடத்தை எடுத்தால், அங்கு அல்லாஹ் இறங்குகிறான் என்று அர்த்தம், மேலும், அல்லாஹ் கூறுகிறான் :
[42:11] – لَيْسَ كَمِثْلِهِۦ شَىْءٌۭ ۖ
அவனைப் போன்று எப்பொருளும் இல்லை
அவனது அனைத்து பண்புகளுக்கும் இது பொருந்தும். அதனால், இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கேள்வி. இரவின் மூன்றாவது பகுதியில், அல்லாஹ் கடைசி வானத்திற்க்கு இறங்குகிறான் என்று உறுதியாக நம்புங்கள், இது ஒவ்வொரு இரவும், எந்த இடத்தில் இருந்தாலும்.
அல்லாஹ் எப்போதும் இறங்கி இருக்கின்றான் என்று கூறுவது உண்மை இல்லை. இந்த பதிலை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், அதை வெளியே எடுக்காதீர்கள். நீங்கள் இரவின் மூன்றாவது பகுதியை அடைந்தால், அல்லாஹ் இறங்குகிறான், நீங்கள் மற்றொரு நேரத்தில் இருந்தால் அல்லாஹ் இறங்கவில்லை, அவ்வளவு தான்.
அல்லாஹ்வின் பண்புகள், படைப்புகளின் பண்புகளை போல் இல்லை என்பதால், அல்லாஹ் கடைசி வானத்திற்க்கு இறங்குகிறான் என்று நாம் நம்பும் பொது, அவன் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறான் என்று நம்புகிறோம். இதை ஒரு படைப்புக்கு நாம் அதை கற்பனை செய்து பார்க்கலாமா ? அது ஒரு இடத்திர்க்கு இறங்கும் போது, அதே நேரத்தில், அது எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிரது என்று ?
அதனுடன், அல்லாஹ் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறான், மற்றும் அவன் இறங்குகிறான் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் ஒரு அடிமை தனது ரப்பொடு நெருக்கமாஹ இருக்கிர நேரம் சுஜூதில் இருக்கும் பேது என்று நம்புகிறோம்; அல்லாஹ் அர்ஷின் மேலே இருக்கும் பேது.
நாம் சொல்ல மாட்டோம் : எப்படி ஒரு அடிமை தனது ரப்பொடு நெருக்கமாஹ இருக்கமுடியும், அல்லாஹ் அர்ஷின் மேலே இருக்கும் பேது என்று ?
நாங்கள் பதிலளிக்கிறோம் : இந்த கேள்வி எப்போது வரும் என்றால், அல்லாஹ்வின் பண்புகளை, படைப்புகளின் பண்புகளொடு ஒப்பிடும் போது.
எனது சகோதரர்களே ! உங்களுக்கு என் அறிவுரை என்ன என்றால், இவை போன்ற விஷயங்களில் நுழைய வேண்டாம், ஏனெனில் நம் அறிவு, பார்வையை விட அல்லாஹ் மகத்தானவன், மேலானவன்.
சொல்லுங்கள் : நான் அல்லாஹ்வை நம்புகிறேன், பிறகு கூறுங்கள் :
[42:11] – لَيْسَ كَمِثْلِهِۦ شَىْءٌۭ ۖ
அவனைப் போன்று எப்பொருளும் இல்லை
இந்த விஷயம் இங்கே நிறுத்தப்படும். உங்களுக்கு புரிகிறதா ? எனவே, இந்த வகையான கேள்விகள் உங்களிடம் வந்தால், ஏனெனில் சிலர், தங்கள் அறிவுடன், அல்லாஹ் இறங்குவதை படைப்புகள் இறங்குவதோடு ஒப்பிடும் போது, இந்த வகையான கேள்விகள் வரும். நாம் சொல்வோம் : “நூல்களின் (குர்ஆன்/ஸுன்னாஹ்) மூலம் என்ன வந்துள்ளது என்பதை நம்புங்கள், அதற்கு அப்பால் போகாதீர்கள், அதைச் சுற்றி கேள்விகளைக் கேட்காதீர்கள்.”