கட்டுரை 4 : அல்லஹ்வின் இறங்குதல் – ஷேக் உஸைமின்
கேள்வி :
ஒவ்வொரு இரவும், இரவின் மூன்றாவது பகுதியில், அல்லாஹ் கடைசி வானத்திற்க்கு இறங்குவதை கூறும் ஹதிஸைப் பற்றி : இரவின் மூன்றாவது பகுதி, ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்ததிற்கும் வேறுபடும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கும் மாறும். அதனால் அல்லாஹ் எப்போதும் கடைசி வானத்தில்தான் இருக்கிறானா ?
பதில் :
என் சகோதரனே ! எங்கள் நிலை இதை போன்ற விஷயங்களை பற்றி பேச தடைசெய்கிறது, இந்த நிலையை விட்டு நாம் நகர மாட்டோம். நீங்கள் இரவின் மூன்றாவது பகுதியில் ஒரு நாட்டில் இருந்தால், உறுதியாக நம்புஞ்கல், அல்லாஹ் கடைசி வானத்திற்க்கு இறங்குகிறான் என்று. அதைப்போல் நீங்கள் வேறொரு நாட்டில், மற்றொரு நெரத்தில் (இரவின் மூன்றாவது பகுதியை தவிர) இருந்தால், அங்கு அல்லாஹ் இறங்கவ்வீல்லை என்று அர்த்தம்.