Skip to content

முன்னுரை

  • by

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

ஒரு முஸ்லீம், ஒரு நாளில், குறைந்தபட்சம் பதினேழு முறை ஸுரத்துல் ஃபாதிஹவை ஒதுவார், இதில், இந்த வசனங்கள் உள்ளன :

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ – 1:6

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ […]- 1:7

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி […]

அவர் பணிவோடும், அர்ப்பணிப்போடும், அல்லாஹ்விடம் நேர் வழியை கேட்கிறார், ஆனால் இந்த நேர் வழி, அல்லாஹ் எவர்களுக்கு அருள் புரிந்தானொ, அவர்கலின் வழி என்ன? அல்லாஹ் கூறுகிறான் :

وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا – 4:69

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.

இதனால், அது நபிமார்களின், ஸித்தீகீன்களின், ஷுஹதாக்களின், ஸாலிஹீன்களின் வழி.

அல்லாஹ்வின் தூதர், நமக்கு நேர் வழியை காட்டினார்கள், மற்றும் இஸ்லாத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று விளக்கினார்கள். அதை, நபித் தோழர்கள் சிறந்த வழிகளில் நடைமுறைப்படுத்தினர்கள், அதனால் தான் அவர்களையும், அவர்களை பின்பற்றுபவர்களையும், அல்லாஹ் பொருந்திக் கொன்டான் :

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ – 9:100

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீண்ழு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் இதுவே மகத்தான வெற்றியாகும்.

எனவே, ஒரு முஸ்லிம், சொர்க்கம் நுழைய, அல்லாஹ்வின் பொருத்ததை அடைய, இந்த வழியை பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்.

authenticislam.orgஇன் நோக்கம், ஸுன்னாவின் அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரசங்கிகளிலிருந்து கட்டுரைகள், புத்தகங்கள், ஆடியோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம், நம்பகமான தூய இஸ்லாமிய கொல்கையை முன்வைப்பதாகும்.

அல்லாஹ் இந்த சிறிய முயற்சியை ஏற்றுக்கொள்வானாக, நல்ல செயல்களின் தராசில் இதைச் சேர்பானாக. அல்லாஹ் எனக்கு உதவி செய்தவர்களுக்கு வெகுமதியளிப்பானாக. அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியில் வழிகாட்டுவானாக.

PS, நீங்கள் கட்டுரைகளில் தவறுகளை கண்டால், என்னை தொடர்பு கொள்ளவும், அதை சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம் : admin@authenticislam.org

والله تعالى أعلم



மறுமொழி இடவும்