Skip to content

கட்டுரை 5 : தற்கொலை செய்து கொண்ட முஸ்லிம்களின் மீது ஜநாஸா தொழுகை – இமாம் பர்பஹாரி, ஷேக் ஃபௌஸானின் விளக்கம்

  • by

والصلاة على من مات من أهل القبلة سنة والمرجوم والزاني والزانية والذي يقتل نفسه وغيره من أهل القبلة والسكران وغيرهم الصلاة عليهم سنة

« கிப்லாவை நோக்கி தொழுத மக்களில் ஒருவர் இறந்துவிட்டால், அவர் மிது ஜநாஸா தொழுகை தொழ வேண்டும் : விபச்சாரம் சைததால் கல் ஏரிங்த்து கொல்லபட்டவர்கள், விபச்சாரம் சைத ஆண்கள்/பெண்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், குடிகாரர்கள் போன்ற கிப்லாவை நோக்கி தொழுத மற்றவர்கள்இவகர்ளின் மீது ஜநாஸா தொழுகை தொழுவது சுன்னத்தாகும். »

விளக்கம் :

போன்ற குரிப்பில் கூறியது போல; இஸ்லாத்தையும், ஈமானயும் வெளிப்படுத்தும் ஒருவரின் மீது ஜநாஸா தொழுகை தொழ வேண்டும், இவர் அஹ்லுல் கிப்லாஹ் அவார் : இவர்கள் மக்காவில் உள்ள காபாவை நோக்கி தொழுகிர மக்கள். இது முஸ்லிம்களின் தொழுகையின் திசையாகும்.

உயிருடன் இருந்தாலும் அல்லது இறந்துவிட்டாலும், நாம் அவர்களை முஸ்லீம்கள் என்று கருதுகிறோம்.

அவரது கூற்று :

والمرجوم والزاني والزانية والذي يقتل نفسه وغيره من أهل القبلة

விபச்சாரம் சைததால் கல் ஏரிங்த்து கொல்லபட்டவர்கள், விபச்சாரம் சைத ஆண்கள்/பெண்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், […] போன்ற கிப்லாவை நோக்கி தொழுத மற்றவர்கள்…”

பாவம் செய்யும் ஈமான் கொண்டவர், அவரது பெரும் பாவத்தின் காரணமாக, இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற மாட்டார். நாம் அவரை முஸ்லீமாக கருதுவொம். அவருக்கு பிரார்த்தனை சைவொம்; தற்கொலை செய்தவர் அல்லது விபச்சாரம் செய்ததால் கல் ஏரிங்த்து கொல்லபட்டவர் போன்ற மக்கள். நபி (صلى الله عليه وعلى آله وسلم), மாஇஸ் (رضي الله عنه) [1], காமிதியா பெண்மனி (رضي الله عنها) [2] போன்ற, கல் ஏரிங்த்து கொல்லபட்டவர்களின் மிது ஜநாஸா தொழுதார்கள்.

நபி (صلى الله عليه وعلى آله وسلم), தற்கொலை செய்தவர் மற்றும் யுத்த செல்வத்தை திருடியவர் போன்ற, சிலர் மீது தொழவில்லை. இது மக்களுக்கு பாடம் கற்ப்பிக்க சைத செயல், மேலும் நபி (صلى الله عليه وعلى آله وسلم), இந்த மக்களை காஃபிர்கள் என்று கருதவில்லை, எனவே ஸஹாபாக்களை தொழுகை நடத்த அனுமதி வழங்கினார்கள். அவர்களின் மீது தொழுவதை, நபி (صلى الله عليه وعلى آله وسلم) தடுக்கவில்லை, அவரிகள் முஸ்லீம்கள் என்பதால்.

அவரது கூற்று :

«  … والسكران وغيرهم الصلاة عليهم سنة »

«குடிகாரர்கள் […]..இவகளின் மீது ஜநாஸா தொழுகை தொழுவது சுன்னத்தாகும்»

மதுபானம் குடிக்கிறவர் ஒரு பாவி, அவருக்கு அதர்க்குரிய தண்டனை நிறுவ வேண்டும். எனினும், அவர் இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற மாட்டார், அவர் இறந்துவிட்டால், அவர் மிது ஜநாஸா தொழுகை தொழு வேண்டும், அவர் குடிகாரராக இருந்தாலும்கூட, அவர் அஹ்லுல் கிப்லாவின் ஒருவர் என்பதால்.

அவரது கூற்று:

« سنة »

«சுன்னத்தாகும்»

அதாவது, அது அல்லாஹ்வின் தூதரின் சுன்னத், இதை, ஒருவர் பின்பற்ற வேண்டிய கடமை.

[1] Sahih Bukhari 6820

عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ جَاءَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَاعْتَرَفَ بِالزِّنَا فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ مَرَّاتٍ‏.‏ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏“‏ أَبِكَ جُنُونٌ ‏“‏‏.‏ قَالَ لاَ‏.‏ قَالَ ‏“‏ آحْصَنْتَ ‏“‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ فَأَمَرَ بِهِ فَرُجِمَ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ فَرَّ، فَأُدْرِكَ فَرُجِمَ حَتَّى مَاتَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْرًا وَصَلَّى عَلَيْهِ‏.‏ لَمْ يَقُلْ يُونُسُ وَابْنُ جُرَيْجٍ عَنِ الزُّهْرِيِّ فَصَلَّى عَلَيْهِ‏.‏

ஜாபிர்(رضي الله عنه) அறிவித்தார்.
பனூஅஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மாஇஸ் இப்னு மாலிக்) நபி(صلى الله عليه وعلى آله وسل) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி(صلى الله عليه وعلى آله وسل) அவர்கள் அவரை வட்டுத் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது அவரிடம் நபி(صلى الله عليه وعلى آله وسل) அவர்கள், ‘உமக்குப் பைத்தியமாக?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்என்றார். எனவே நபி(صلى الله عليه وعلى آله وسل) அவர்கள், அவருக்கத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி(صلى الله عليه وعلى آله وسل) அவர்கள் அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்.

[2] Sahih Muslim 3500

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ مَاعِزَ بْنَ مَالِكٍ الأَسْلَمِيَّ، أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ ظَلَمْتُ نَفْسِي وَزَنَيْتُ وَإِنِّي أُرِيدُ أَنْ تُطَهِّرَنِي ‏.‏ فَرَدَّهُ فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ أَتَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ زَنَيْتُ ‏.‏ فَرَدَّهُ الثَّانِيَةَ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى قَوْمِهِ فَقَالَ ‏“‏ أَتَعْلَمُونَ بِعَقْلِهِ بَأْسًا تُنْكِرُونَ مِنْهُ شَيْئًا ‏“‏ ‏.‏ فَقَالُوا مَا نَعْلَمُهُ إِلاَّ وَفِيَّ الْعَقْلِ مِنْ صَالِحِينَا فِيمَا نُرَى فَأَتَاهُ الثَّالِثَةَ فَأَرْسَلَ إِلَيْهِمْ أَيْضًا فَسَأَلَ عَنْهُ فَأَخْبَرُوهُ أَنَّهُ لاَ بَأْسَ بِهِ وَلاَ بِعَقْلِهِ فَلَمَّا كَانَ الرَّابِعَةَ حَفَرَ لَهُ حُفْرَةً ثُمَّ أَمَرَ بِهِ فَرُجِمَ ‏.‏ قَالَ فَجَاءَتِ الْغَامِدِيَّةُ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ زَنَيْتُ فَطَهِّرْنِي ‏.‏ وَإِنَّهُ رَدَّهَا فَلَمَّا كَانَ الْغَدُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ لِمَ تَرُدُّنِي لَعَلَّكَ أَنْ تَرُدَّنِي كَمَا رَدَدْتَ مَاعِزًا فَوَاللَّهِ إِنِّي لَحُبْلَى ‏.‏ قَالَ ‏“‏ إِمَّا لاَ فَاذْهَبِي حَتَّى تَلِدِي ‏“‏ ‏.‏ فَلَمَّا وَلَدَتْ أَتَتْهُ بِالصَّبِيِّ فِي خِرْقَةٍ قَالَتْ هَذَا قَدْ وَلَدْتُهُ ‏.‏ قَالَ ‏“‏ اذْهَبِي فَأَرْضِعِيهِ حَتَّى تَفْطِمِيهِ ‏“‏ ‏.‏ فَلَمَّا فَطَمَتْهُ أَتَتْهُ بِالصَّبِيِّ فِي يَدِهِ كِسْرَةُ خُبْزٍ فَقَالَتْ هَذَا يَا نَبِيَّ اللَّهِ قَدْ فَطَمْتُهُ وَقَدْ أَكَلَ الطَّعَامَ ‏.‏ فَدَفَعَ الصَّبِيَّ إِلَى رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ ثُمَّ أَمَرَ بِهَا فَحُفِرَ لَهَا إِلَى صَدْرِهَا وَأَمَرَ النَّاسَ فَرَجَمُوهَا فَيُقْبِلُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِحَجَرٍ فَرَمَى رَأْسَهَا فَتَنَضَّحَ الدَّمُ عَلَى وَجْهِ خَالِدٍ فَسَبَّهَا فَسَمِعَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم سَبَّهُ إِيَّاهَا فَقَالَ ‏“‏ مَهْلاً يَا خَالِدُ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ تَابَهَا صَاحِبُ مَكْسٍ لَغُفِرَ لَهُ ‏“‏ ‏.‏ ثُمَّ أَمَرَ بِهَا فَصَلَّى

புரைதா பின் அல்ஹசீப் (رضي الله عنه) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் அல்அஸ்லமீ (رضي الله عنه)) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நானே அநீதி இழைத்துக்கொண்டேன். நான் விபச்சாரம் செய்துவிட்டேன். என்னைத் தாங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்என்று கூறினார். (அவரை அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.) மறு நாளும் அவர் அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்என்று கூறினார். அப்போதும் அவரை அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்கள் திருப்பியனுப்பிவிட்டார்கள்.
பிறகு அவருடைய குலத்தாரிடம் அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்கள் ஆளனுப்பி, “அவருடைய அறிவில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் அறிகிறீர்களா? அவரிடம் ஏதேனும் ஆட்சேபகரமான நடவடிக்கையைக் காணுகிறீர்களா?” என்று விசாரித்தார்கள். அதற்கு அம்மக்கள், “முழுமையான அறிவோடுதான் அவர் உள்ளார் என்றே நாங்கள் அறிகிறோம். எங்களைப் பொறுத்தவரை அவர் எங்களில் நல்ல மனிதர்களில் ஒருவராக உள்ளார்என்று கூறினர்.
பிறகு மூன்றாவது முறையாக அவர் வந்தபோதும் அவருடைய குலத்தாரிடம் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்கள் ஆளனுப்பி அவரைப் பற்றி விசாரித்தார்கள். அப்போதும் அவர்கள், “அவருக்கு எந்தக் கோளாறுமில்லை. அவரது அறிவிலும் எந்தக் குறையுமில்லைஎன்று தெரிவித்தனர். நான்காவது முறை அவர் வந்து முன்பு போன்றே கூறியபோது, அவருக்காகக் குழியொன்றைத் தோண்டும்படி பணித்தார்கள். பிறகு அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அடுத்து ஃகாமிதிய்யா” குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்களிடம்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன். (உரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்கள் அப்பெண்ணை திருப்பியனுப்பிவிட்டார்கள். அப்பெண் மறு நாள் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னைத் திருப்பியனுப்புகிறீர்கள்? மாஇஸ் அவர்களைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் தாங்கள் திருப்பியனுப்புகிறீர்கள் போலும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (தகாத உறவில் ஈடுபட்டு) கர்ப்பமுற்றுள்ளேன்என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்கள், “இல்லை, நீ சென்று குழந்தை பெற்றெடு (பிறகு திரும்பி வா)” என்று சொன்னார்கள். குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தையை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்களிடம் வந்து, “இது நான் பெற்றெடுத்த குழந்தைஎன்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்கள், “நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்த பின் திரும்பி வாஎன்றார்கள்.
பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண், “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்கள், அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். ஆகவே, அவருக்காக நெஞ்சளவு குழி தோண்டப்பட்டது. (பின்னர் அக்குழிக்குள் அப்பெண்ணை நிறுத்திய பின்) மக்களுக்குக் கட்டளையிட, அவருக்குக் கல்லெறி தண்டனையை மக்கள் நிறைவேற்றினார்கள். காலித் பின் அல்வலீத் (رضي الله عنه) அவர்கள் கல் ஒன்றை எடுத்துக் கொண்டுவந்து, அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். இரத்தம் காலித் (رضي الله عنه) அவர்களின் முகத்தில் தெரித்தது.
அப்போது அவரை காலித் ஏசினார்கள். காலித் (رضي الله عنه) அவர்கள் ஏசியதை அல்லாஹ்வின் தூதர் (صلى الله عليه وعلى آله وسل) அவர்கள் செவியுற்றபோது, “காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார். பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட பாவமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்என்று கூறினார்கள். பிறகு அப்பெண்ணுக்கு இறுதித்தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு பணித்து, அவருக்காகத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அவர் அடக்கமும் செய்யப்பட்டார்.மறுமொழி இடவும்