இப்ன் உமர் (رضي الله عنه) ஹதீஸில், இறைத்தூதர் (صلى الله عليه وعلى آله وسلم) அவர்கள் கூறினார்கள்:
“நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். […]”
(ஸஹீஹுல் புகாரி 1913 / ஸஹீஹ் முஸ்லிம் 2511)
நபி அவர்கலளின் கூற்று : “உம்மி சமுதாயமாவோம்“, அதாவது பெரும்பான்மையில், அந்த காலத்தில் பெரும்பான்மையான மக்கள் எழுதவில்லை மற்றும் கணக்கிடவில்லை , மேலும் எழுத, கணக்கிட அறிந்தவர்கள் சிலர் மட்டுமே, இங்கு பெரும்பான்மையான மக்களை குறிக்கிறது. இதனால், நபி அவர்களின் கூற்றின் “உம்மி சமுதாயமாவோம்” பொருள் : நம் பெரும்பான்மையான மக்களுக்கு எழுத கணக்கிட தெரியாது. மேலும், அல்லாஹ்வின் (سُبْحَانَهُ وَ تَعَالَى) நிஃமத்களின் (அருள் கொடை) மத்தியில் ஒன்று : அல்லாஹ், வழிபாடுகளை புரிந்து கொள்ள எளிதாக செய்தான், எழுத படிக்க தெரியாத ஒருவருக்கு கூட, எளிது. வனக்க வழிபாடுகளுக்கு எழுத படிக்க தேவை இல்லை, மாறாக அது வெளிப்படையானது.
உதாரணத்திற்கு, ஐந்து தினசரி தொழுகைகள், அதன் நேரம் ஒவ்வொரு நபருக்கும் துல்லியமானது, அது சூரியனின் இயக்கத்துடன் தொடர்புடையது : சூரியனின் விடியல், உச்சம், மறைவு. அதன் மூலம், மக்கள் இதை தெளிவாக / எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
மாதத்தின் ஆரம்பம், புதிய சந்திரனுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய சந்திரன் காணப்படவில்லை என்றால், சென்ற மாதத்தை, நாம் முழுமை படுத்த வேண்டும், ஷாஃபான் மாதத்தை முப்பது நாட்களாக, மற்றும் பல… வானியல் கணக்கீடு, மாதத்தின் தொடக்கத்தை தீர்மானிக்க, அல்லாஹ்வின் சட்டத்தில் இடம் இல்லை என்பதை, இவை காட்டுகின்றன. பிரபஞ்சத்தின் இறைவன் (سُبْحَانَهُ وَ تَعَالَى), அடியார்களுக்கு மாதத்தின் தொடக்கத்தை, புதிய சந்திரனை கான்பதின் மூலம் அல்லது சென்ற மாதத்தை முப்பது நாட்களாக முழுமை படுத்துதலின் மூலம், செய்தான்.
அல்லாஹ் நிச்சயமாக தன் அறிவால் சூழ்ந்து இருக்கிறான், மக்கள் வானியலில் மற்றும் கணிதத்தில் முன்னேறுவார்கள் என்று. அல்லாஹ்வின் சட்டம் என்றும் நிலைத்திருக்கும், அது நிரந்தரமானது, எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும். இன்று மாதத்தின் ஆரம்பத்திர்க்கு எது ஏற்றுக்கொள்ளப்படும் என்றால், அது நபி (صلى الله عليه وعلى آله وسلم) அவர்கலளின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட முறை மட்டுமே. அதனால் தான், மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்க வானியலும், கணிதலும் அனுமதிக்கப்படவில்லை.
எனினும், சல இடங்களில், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன் ரமலான் மாதத்தின் தொடக்கத்தை அறிவிக்கிறார்கள். அது இந்த நாளில் தொடங்கும் என்று…இது அல்லஹ்வின் சட்டத்தில் இல்லை, ஏனெனில் அல்லாஹ் (سُبْحَانَهُ وَ تَعَالَى) கூறுகிறான் :
فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ
ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்
[S.2 v. 185]
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْأَهِلَّةِ ۖ قُلْ هِىَ مَوَٰقِيتُ لِلنَّاسِ وَٱلْحَجِّ ۗ
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன.
[S.2 v.189]
—
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، – رضى الله عنهما – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
“الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ فَإِذَا رَأَيْتُمُ الْهِلاَلَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ “
இறைத்தூதர் (صلى الله عليه وعلى آله وسلم) அவர்கள் கூறினார்கள்:
‘ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.’
என அப்துல்லாஹ் இப்னு உமர் (رضي الله عنه) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புகாரி 1906 / ஸஹீஹ் முஸ்லிம் 2505)